×

பறிமுதல் செய்த ஜோதிட புத்தகங்களை திரும்ப கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் ராசிராஜன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2021ல் தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை அரசியல் தலைவர்களின் ஜாதங்களை  ஆராய்ந்து  “அடுத்த ஆட்சி” என்ற பெயரில் புத்தகங்களை வெளியிட்டோம். அந்த புத்தகத்தில் எந்த ஆட்சேபனை கருத்துகளும் இல்லாத நிலையில், தேர்தல் ஆணையம், அந்த புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளது. எனவே, பறிமுதல் செய்த 79,200 புத்தகங்களை திரும்ப ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ரபேல் தொடர்பான புத்தகம் பறிமுதல் செய்யப்பட்ட அன்றே திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், எங்கள் புத்தகங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission, Court
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்